அப்பாவின் முகம் காண
appaavin mugam kaana
அப்பாவின் முகம் காண வெகு நாள் ஆசை எப்போது நான் கண்டு அகமகிழ்வேன் உம் முகம் காணவே ஓடிவந்தேன் ஐயா திருமுக தரிசனம் வேண்டும் ஐயா
1.சாரோனின் ரோஜாவாம் பள்ளத்தாக்கின் லீலி மலருக்குள் என் நேசரோ அவர் வெள்ளைப்போளப் பூச்செண்டல்லவா மருதோன்றிப் பூங்கொத்து என் நேசரோ
2.என் நேசர் சத்தம் அதோ கேட்கின்றதே மலைகள் மேல் குதித்து வருகின்றாரே வெளி மான்களைப்போல் துள்ளி வருகின்றாரே மரைக்குட்டி அழகைப் போல் என் நேசரோ
3.ஆயிரம் மரங்களுள் கிச்சிலி போல் அரச குமாரருள் என் நேசரோ வாயின் முத்தங்களால் என்னை முத்தம் செய்யும் உம் அன்பிற்கீடாக எதுவுமுண்டோ
More from Yesuvin Prasannam
- உம் முகம் பார்த்துum mugam paarthuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- உம்மை மறவாத மனம் வேண்டும்ummai maravaadha manam vendumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் இயேசுவே ஏன் இந்தen yesuvae en indhaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- என் மகனே நீ கைவிடப்பட்டுen maganae nee kaividappattuPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- ஒரு சின்ன பிள்ளைபோல்oru sinna pillaibolPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- தேவைகளை அறிந்து தினம்தினம் நடத்தும்thevaigalai arindhu thinamdhinam nadathumPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- நித்தம் என்னை நேசிக்கும் இயேசையாnitham ennai nesikkum iyesaiyaaPr. T. Inbakumar · Yesuvin Prasannam
- பரிசுத்த தேவனே பரிசுத்தparisutha devanae parisuthaPr. T. Inbakumar · Yesuvin Prasannam