தென்றலை சுவாசிக்கிறேன்
thendralai suvaasikkiren
தென்றலை சுவாசிக்கிறேன் - உந்தன் வசனம் சுமப்பதால் - குழல் ஓசையை நேசிக்கிறேன் - வேத வார்த்தை கலந்ததால் - நீல வானத்தை ரசிக்கிறேன் - உந்தன் மகிமை தெரிவதால் - இந்த இயற்கையை ருசிக்கிறேன் - அதில் உம்மை காண்பதால் - குளிர்
1. காட்டுமலர்கள் அழகில் உந்தன் படைப்பை காண்கிறேன் - வானம் பாடி வானில் பறக்கும்போ தும் அன்பை காண்கிறேன்-இடி மின்னல் மழையின் நடுவில் உந்தன் வல்லமை காண்கிறேன் குயிலோசையின் இனிமையில் மன நிறைவு காண்கிறேன்-குளிர்
2 உறைந்த பனியின்மென்மையில் உந்தன் கிருபை காண்கிறேன் - கார் மேகம் வானில் அலையும் போதும் வருகை நினைக்கிறேன் - மரம் செடிகொடிகளின் சலசலப்பு உம் கருணை காண்கிறேன் சிட்டு குருவிகள் வாழ்க்கையில் முழு நம்பிக்கை காண்கிறேன் புது
3. வானவில்லின் வண்ணங்களில் உயர் வாழ்வு காண்கிறேன்-விடி வெள்ளி சுடரின் பயணத்தில் உம் பிறப்பை நினைக்கிறேன்-புயல் காற்று வெள்ளம் பூமி அதில் அச்சம் காண்கிறேன் - வேத வசன தியானம் தொடரும் நேரம் அமைதி காண்கிறேன்-குளிர்
4. தூய கரங்கள் உயர்த்தி நானும் ஜெபிக்கும் போதிலே-தூய ஆவி என்னை ஆற்றி தேற்றும் உண்மை காண்கிறேன் -துதி புலிகள் செலுத்தி போற்றும் போது மகிழ்ச்சி காண்கிறேன்-அந் தினம் தினம் உம் தூய பிரசன்னம் நிரம்ப காண்கிறேன் - புது
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam