தத்தி தத்தி நடந்து
thathi thathi nadandhu
தத்தி தத்தி நடந்து வரும் சிங்கார மழலை - நீ திக்கி திக்கி பேசும் உந்தன் கொஞ்சுமொழி குரலை கேட்க கேட்க செவிகளிரண்டும் தேனை குடிக்குது உன்னைப்போல மாறவே எந்தன் உள்ளம் துடிக்குது உன்னைக் கட்டி பிடித்தொரு முத்தம் கொடுத்திட இதழ்கள் துடிக்குது - கண்ணே
நீ பேசும் மழலை மொழியில் நூறு கவிதை தெரியுது சில மனிதர் பேசும் வார்த்தையினால் ஊரே எரியுது - தேவ கிருபை நிறைந்த வார்த்தையில் மன காயம் ஆறுது-நீ
சாதி சமயம் வேதம் படிக்க ஆசீர்வாதம் பெருகுது கண்ணே சமய பேதம் உனக்கு தெரிவதில்லையே - இது ஞானிகட்கும் மேதைகட்கும் புரிவதில்லையே - உந்தன் கள்ளமில்லாத வெள்ளை சிரிப்புக்கு ஈடு இல்லையே - மன தெளிவில்லாத தீய மனிதர் நிலைப்பதில்லையே கண்ணே தொலைக்காட்சி தொடர்கள் நீ விலக்கவேண்டுமே
தேவனை துதிப்பதுபோல் பாடங்களையும் படிக்க வேண்டுமே நம் இயேசுவைப்போல பெற்றவர்க்கு கீழ்படியவேண்டுமே-மனத் தெளிவுடன் இந்த உலகை எதிர்த்து நடக்கவேண்டுமே கண்ணே
வேஷம் போடும் மனிதர் மாயம் அழியவேண்டுமே - வேத வசனம் விட்டுவிலகும் மனிதர் அகலவேண்டுமே - வழி விலகிடாது சிலுவை பாதை நடக்கவேண்டுமே - தூய ஆவி தேவமைந்தன் உன்னை நடத்தவேண்டுமே கண்ணே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam