தாய் தன் பாலகனை மறப்பாளோ
thaay than paalaganai marappaalo
தாய் தன் பாலகனை மறப்பாளோ தாய் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்றும் நான் உன்னை மறப்பதில்லை
1. இவ்வுலகம் தோன்றும் முன்னே, என் நெஞ்சில் நினைத்த உன்னை என் சாயல் ரூபம் தந்து, உள்ளங்கையில் ஏந்தி நின்றேன் மிஞ்சிடாத அலைகள் முன்னே ஜீவவழி நடந்து வந்தால் என் சீயோன் மகிமை நீயே! சகாயம் நானே செய்வேன்
2. முன்னணை முதல் உன்னை கண்மணி போல காத்து என் நிழல் சுகம் தந்து, விரும்பியே வளர்த்து வந்தேன் ஜீவ காலம் முடியும் முன்னே, எனக்காக துணிந்து வாழ்ந்தால் என் வழி நல் ஒளி நீயே! எந்நாளும் நடத்திடுவேன்
3. நானே உன் மகிமை தீபம் உன் துக்கம் முடிந்து போகும் உன் தேவன் இயேசு நானே மகத்தான கிரியை செய்தேன் அநுக்கிரகம் முடியும் முன்னே, என் நாமம் தரித்திருந்தால் நற்கனி திராட்சை நீயே! மதுரத்தில் கீதம் தருவேன்
4. யூதா நீ சிறிதானாலும் ஆளுபவர் உன்னில் உண்டே மலைகளை நொறுக்கிடுவாய், குன்றுகளை பதராய் எறிவாய் கூர்மையான உனக்கு முன்னே, சுழல் காற்றை நடுங்க வைத்தால் என் இதயமுத்திரை நீயே! உச்சித நேசம் பொழிவேன்
5. ஆத்தும நங்கூரம் பரம ஈவு பொருளும் நானே பெருகவே பெருகிவாய், பரம சேனை சபையாய் திகழ்வாய் சாலேமின் இராஜா முன்னே ஒருமனதில் ஒன்றாய் நின்றால் சிலுவைக்கொடி நேசம் நீயே! சூடுவேன் வாடாத கிரீடம்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal