தாமதமேன் தயாபரனே
thaamadhamen thayaabaranae
தாமதமேன் தயாபரனே - உந்தன் பூமுகம் கானவே ஏங்குகிறேன் நித்தம் நித்தம் என்ன ஏய்த்தழித்திடும் உலகினை வெறுத்திடவே ஒத்து போகாதென் உடலை வீசி- என் றென்றும் உம்முடன் சேர்ந்து வாழ்ந்திட
மனிதரின் வார்த்தையில் மனங்கசந்தேன் மறா உம் கிருபையில் மனமகிழ்ந்தேன் சேரா ஸ்நேகத்தால் நிலைகுலைந்தேன் மன்னரின் கரம் அணைக்க முகம் மலர்ந்தேன் அங்குமிங்குமலைப் பாய்ந்திடும் மனம் ஆறுதல் அடைந்திடவே யூதா ராஜ சிங்கம் வெண்சிங்காசனம் ராஜ ராஜனிவர் இராஜ்ஜியம் கானவே
சிவந்த மனிதன் இவன் நிழல் வெளுப்போ - அந்த கருத்தவன் உதிரத்தின் நிறம் கருப்பு மனிதரில் பேதங்கள் மிகுந்திடல் கான மனம் பதறும் எந்தன் உடல் உதறும் தெய்வதிருமகன் சிந்திய உதிரம் காலில் மிதிபடுமோ எய்த அம்புகள் ஏந்தும் பொல்லாங்கன் வஞ்சகம் எந்தன் வாழ்வில் விலகிடுமோ
கனியுண்ட பாவம் எமில் கழுவிடவே களங்கமெலாம் நீங்கி மகிழ்வுறவே பரமகுமாரன் எந்தன் ஜீவனன்றோ மரணமும் இனியெந்தன் இலாபமன்றோ வானில் தூதர் கணம் கூடி பாடிவர சிறகுகள் விரித்திடுவேன் பாவமேனியிதை வீசியெறிந்து மறு ரூப மேனியை அழகுற அணிந்திடவே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam