சிந்திப்போம் சிந்திப்போம்
sindhippom sindhippom
சிந்திப்போம் சிந்திப்போம் செயல்படுவோம் உழைப்போம் உழைப்போம் உயர்ந்திடுவோம் இனி காலம் செல்லாது இந்த உலகம் நிலைக்காது
1. துணிவிருந்தால் தேன் கூடுகளும் மனிதர்க்கு அரண்மனைதான் மனமிருந்தால் மைனாவின் கூடுகளும் புள்ளிமானுக்கும் புகலிடம்தான் - நீ முதலடி எடுத்தால் வலகரம் பிடிப்பார் வழுவாமல் காத்திடுவார் - பெருங் கடல் மேல் நடந்து அலைகளை மிதிப்போம் அவரென்று துணையிருப்பார் - சிந்திப்போம்
2. கடுகளவேனும் விசுவாசம் இருந்தால் மலைகளை புரட்டிடலாம் - மன கண்களைத் திறந்தால் மாராவின் கசப்பு மதுரமாய் மாற்றிடலாம் - கொஞ்சம் தைரியம் இருந்தால் கூழாங்கல் போதும் எதிரியை வீழ்த்திடலாம் - நம் சேனையின் தேவன் கூட இருக்கிறார் ஜெய கொடி ஏற்றிடலாம் - சிந்திப்போம்
3. வானமும் பூமியும் ஒழிந்தே போகும் ஒழியாதவர் வசனம் - என்றும் அவரது வசனம் அதிசயம் செய்யும் அதற்கே அடிபணிவோம் - அவர் இங்கே இருக்கிறார் இங்கே இருக்கிறார் என்போரை புறக்கணிப்போம் மண வாளனும் கீழ் வானில் தோன்றிடும் நாளும் நெருங்குது விழித்திருப்போம் சிந்திப்போம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam