சிலுவை மரத்தில் தொங்குகிறார்
siluvai marathil thongugiraar
சிலுவை மரத்தில் தொங்குகிறார் மனித மீட்புக்கு சீயோன் நேசர்
1.சிலுவையின் வேதனை பெருகிட்டாலும் நிந்தை அவமானம் சூழ்ந்திட்டாலும் மாளும் மாந்தரின் மீட்பை உணர்ந்து பிதாவே! இவர்களை மன்னியும் என்றார் மாட்சிமை மகுட இரட்சகர் இயேசு- சிலுவை
2.ஞான இதயம் வேத நிறைவு அறிவு களஞ்சியம் அன்பின் ஆலயம் கள்ளன் உள்ளம் உடைந்ததைக் கண்டு இன்றைக்கு நீ என்னோடே கூட பரதீசிலிருப்பாய் என்றார் இயேசு- சிலுவை
3.பாசம் கொண்டவர் பரலோக நாதர் பற்றிடும் பண்பின் வசனம் மொழிந்தார் ஸ்திரியே! அதோ உன் மகன் என்றார் சீஷனை நோக்கி அதோ உன் தாய் என்றார் இயேசு மெய் சிலிர்க்க- சிலுவை
4.இன்ப இயேசு உரிமை கொண்டு இன்னல் நீக்கும் ஒளி முகம் காண என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவீட்டீர் என்று கூப்பிட்டு பிதாவோடு இணைந்திட்டார்- சிலுவை
5.கன் மலை சிகரம் இயேசுவே சுரந்து வந்திடும் ஜீவ ஊற்று சிலுவை மரத்தில் தொங்குகிறார் தாகமாயிருக்கிறேன் என்றவரே நம் தாகம் தீர்ககும் ஜீவ நதி- சிலுவை
6.முற்றிலும் அழகு பூரண ரூபம் கற்றவர் கண்டிடும் கரைந்த உள்ளம் கருத்து நிறைந்த சீயோன் சிகரம் முடிந்தது என்றார் வெற்றி தொனியில் முடிவில்லா மகிமை மாளிகை கண்டார்- சிலுவை
7.இன்றும் என்றும் மாறாதவர் இனிய நாமத்தில் திகழ்ந்தவர் பிதாவே! உம்முடைய கைகளில் என் ஆவியே ஒப்புவிக்கிறேன் ஜீவனில் ஜீவன் கண்டு மகிழ்வேன்- சிலுவை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal