செத்தவனை சுமந்து செல்லும்
sethavanai sumandhu sellum
செத்தவனை சுமந்து செல்லும் பொல்லாத மனிதன் - நீயும் செத்துப் போகும் நாளும் வந்து துள்ளாதே மனிதா - ரொம்ப துள்ளாதே மனிதா!
1. நல்லவனோ கெட்டவனோ, படித்து பட்டம் பெற்றவர் ஆளுகின்ற நாட்களெல்லாம் ஆட்டம் போட்டு அலைந்தவனோ ஆடி ஆடி - ஒடி ஒடி நெலிஞ்சு மெலிந்த உடலாகி பேச்சடங்கி மூச்சடங்கி முடிஞ்சு போன சடமாகி - செத்த
2. புத்தி பெற்ற ஞானியோ, சக்தியற்ற ரோகியோ சக்தி புத்தி சேர்ந்திருந்தும் பக்தியற்ற பாவியோ நாடி நாடி - தேடி தேடி - சேர்த்த தெல்லாம் மாயமாகி வீடிருந்தும் வீதியிலே புழுதி போல புரண்டு புரண்டு செத்த
3. நாசியிலே சுவாசமுள்ள வாட்ட சாட்ட மேனியோ பாவத்தாலே சாபமாகி ஓட்டையாகி போனதோ மூடி மூடி - கூடி கூடி குவித்த பாவம் பலகோடி மூடி உன்னை மூடுவார் தேடி வந்த நேசரவர்
செத்தவனை சுமந்து செல்லும் பொல்லாத மனிதன் - இயேசுவின் ஜீவன் பெற வழி இருக்கு அஞ்சாதே மனிதா! - நீ அஞ்சாதே மனிதா!
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam