சேனைகளின் கர்த்தாவே
senaigalin karthaavae
சேனைகளின் கர்த்தாவே உம் தூய வாசஸ்தலம் எவ்வளவு அருமையானது எவ்வளவு இனிமையானது
வாஞ்சையெல்லாம் நீர்தானையா வாழ்க்கையெல்லாம் நீர்தானையா உள்ளங்கள் தேடிடுதே – எங்கள் உதடுகள் போற்றிடுதே
நன்றியுடன் உம்மை துதித்திடவே ஆர்வமுடன் ஓடிவந்தோம் மகிழ்வுடன் ஆராதனை – எங்கள் தேவனே உமக்கு தந்தோம்
கண்ணீர்களின் பள்ளத்தாக்கை கடந்து வந்தோம் கிருபையினால் துதிகளை ஏறெடுத்தோம் – எங்கள் இதயத்தில் பெலனடைந்தோம்
ஆலயத்தின் சம்பூரணம் ஆண்டவரே உம் பிரசன்னம் தெய்வீக உணவு தந்தீர் – தேவ நதியால் தாகம் தீர்த்தீர்
எதிரிகளின் கண்களின் முன் எங்களுக்கோர் விருந்து செய்தீர் ஆனந்த தைலத்தினால் – உள்ளம் நிரம்பியே வழியச் செய்தீர்
புத்தியுள்ள ஆராதனை பக்தியுடன் செய்திடுவோம் பரலோக மகிமைதனை – எங்கள் நடுவினில் கண்டிடுவோம்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal