சேனைகளின் தேவனே
senaigalin devanae
சேனைகளின் தேவனே சாலேமின் ராஜனே முள்ளாலே முடிசூடி மர சிலுவை சுமந்தார் மூன்றாணியால் துளைத்து முகத்தில் அறைந்தால் மன்னித்த முதலியவை எண்ணி எண்ணி பாடுகிறேன்
1. மா பாதகம் செய்தார் மனுகுல மாந்தரெல்லாம் மன்னிக்க வேண்டும் பரலோக தந்தையென்றார் அடங்காத பிள்ளையை போல் அநியாயம் செய்தார் ஆனாலும் ஆண்டவரோ அறியாமல் செய்த தென்றார்
2. பொல்லாத பாதகனை கள்ளர் என தீர்ந்தவனை நல்லாயன் இயேசு சொந்த பிள்ளையென சேர்த்தணைத்து பாவங்களை பரிகரித்து தந்திடவே பரதீசு நாளையென நாட்கடத்தாதின்றுன்னை சேர்ப்பேன் என்றார்
3. தந்தையென தாயுமான சொந்தம் கொண்டாடியவர் மாது மரியாள் இனியுன் தாயாவாள் என் மகனே ஆறா துயர் களையாய் அன்னையா இருந்தவளே அன்பான சீடன் செய்வான் சேர்த்திடுவாய்
4. கைவிட்டதேன் தேவா கைவிட்டதேன் என்றார் நம்பி வந்த பேர் என்றும் கைவிடாத சேயன் இவர் தாங்காத வேதனையோ தாயே தயாபரனே தானாக ஜீவன் தந்த தத்துவம் வானே பொருளே
5. தாகங்கொண்ட பேர்களையும் தன்னிடம் சேர்த்துவிடுவார் தாராளமாய் ஜீவ நீரூற்றாய் மாற்றிடுவார் தூய இரத்தம் வெளியேறிய பொன்மேனி இருந்திடவே தாளாத தாகத்தினால் தாகமென கூவுகின்றார்
6. ஆதிமுதலானவரே அநாதி ஆண்டவரே தந்தையிட்ட சேவைதனில் சிகரம் மேலே சுமந்தவரே வந்த பணி முடித்து விட்டேன் உந்தன் சித்தம் தீர்த்து விட்டேன் எல்லாம் முடிந்தது என்று எந்த பராபரமே
7. தந்தை குமாரனுக்கு அன்பாகவே யளித்த விந்தையான ஆணையிது யாரறிவார் பாரினிலே தானாகத் தந்திடுவார் தானாகவே எடுப்பார் அன்பான தந்தை தந்த விந்தையான ஆணையிதே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam