சலனம் கொண்ட மனதில்
salanam konda manadhil
சலனம் கொண்ட மனதில் சஞ்சலங்கள் வருவது நிஜமா வசனம் நிலைத்திருக்கும் மனதில் சந்தோஷம் மலர்வதும் நிஜமே
1. கிறிஸ்துவின் சிந்தை அணிந்ததால் கவலைகள் என் மேல் படர்வதில்லை உலக சிந்தையால் தேவ பகைஞனாய் மாறினால் வியப்பு ஏதுமில்லை - எனை மயக்கும் உலகிலே மயங்கிடாமலே வலக்கர நிழலில் தங்கிடுவேன்
2. கிறிஸ்துவின் கரம் என்னை தாங்குவதால் துயரக்கடலில் நான் வீழ்வதில்லை இதய நினைவுகள் அறிந்த ஆண்டவர் என்றும் என்னைக் கைவிடுவதில்லை - என் வாழ்வு தாழ்விலும் வாடும் வெயிலிலும் ஆண்டவர் மர நிழல் மறைவதில்லை
3. கிறிஸ்துவின் அன்பென்னை நெருக்குவதால் உலகம் என்னை நெருங்கி வருவதில்லை சிலுவை சுமப்பதால் பாடு சகிப்பதால் சோதனை நேரத்தில் சேர்வதில்லை - என்றும் உமது கரத்தினால் நன்மை பெறுவதால் தீமை என்னை என்றும் தொடர்வதில்லை
4. கிறிஸ்துவின் கிருபை க்குள் வாழ்வதனால் தீயவர் என்னை தேடுவதில்லை நன்மை கிருபைகள் தொடர் செய்திடும் தேவ அன்பு என்றும் குறைவதில்லை - அந்த இறுதி நாள் வரை இயேசு ஆண்டவர் கரங்களை நான் என்றும் விடுவதில்லை
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam