ரெண்டு மடங்கு கொடுக்க
rendu madangu kodukka
ரெண்டு மடங்கு கொடுக்க வேணும் கர்த்தாவே என் வாழ்க்கை - நீங்க கண்டுகிடாம இருக்கவேனும் கர்த்தாவே உந்தன் சித்தம் நினைச்சாலே இதயம் நடுங்குது எந்தன் சித்தம் நடக்கனும்னு மனசு விரும்புது
1. இயேசு நடந்த பாதையிலே சிலுவை தெரியுது உலகம் காட்டும் பாதையிலே மயக்கம் இருக்குது பரிசுத்தமாய் வாழனும்னு வேதம் சொல்லுது - இந்த பாவ உலகம் உடும்பு போல என்ன இழுக்குது வேண்டாம் வேண்டாம் கர்த்தாவே ரெண்டு மடங்கோ பத்து மடங்கு உலகம் வேண்டாம் கர்த்தாவே
2. மாதந்தோரும் அற்புத கூட்டம் ஊரில் நடக்குது - நாங்க வேத புத்தகம் படிச்சு ரொம்ப நாளாச்சுது தெரு தெருவா வீட்டினில் ஜெபக்கூட்டம் நடக்குது - ஆனால் தனிமையிலே ஜெபிக்கும் வழக்கம் கொறஞ்சி போச்சுது வேண்டாம் வேண்டாம் கர்த்தாவே தனிமை ஜெபம் இல்லாத இந்த வாழ்க்கை வேண்டாம் கர்த்தாவே
3. அபிஷேக கூட்டத்துக்கு ஆயிரங்கூடுது - இங்கு உபவாச ஜெபம் வெச்சா கூட்டம் கொறையுது தங்க சாவி எண்ணெய் குடுவை வாங்கி குவிக்குது - நம்ம தங்க சாமி சொன்ன வார்த்தை மறந்து போச்சுது வேண்டாம் வேண்டாம் கர்த்தாவே சிலுவை இல்லா சுகபோகம் எனக்கு வேண்டாம் கர்த்தாவே
ரெண்டு மடங்கு எனக்கு வேணும் கர்த்தாவே - ஜெபிக்கும் ஆவி நூறு மடங்கு கொடுக்க வேணும் கர்த்தாவே - எனக்கு நீங்க
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam