புரட்சி பூக்கள் பூக்க வேண்டும்
puratsi pookkal pookka vendum
புரட்சி பூக்கள் பூக்க வேண்டும் புதிய சிந்தனை மலர வேண்டும் இறைவன் பெயரால் ஏய்க்கும் மனிதரை இனங்கண்டொதுக்கிட வேண்டும் - நீ
1. இடுக்கமான வழி விலக்கி அகன்ற பாதையின் மயக்கம் தந்து உறங்க வைக்கும் சிலுவை பகைஞர் உறவை விலக்க வேண்டும் - தினம் உபத்திரவங்கள் அதிக கன நித்ய மகிமை விரும்பிட வேண்டும் - தன் சிலுவை சுமந்திட வேண்டும்
2. மதுரமான இரசத்தை பருக திரண்டு கூடிடும் கூட்டம் சவுக்கை எடுக்கும் இயேசுவின் பின் தொடர மறுப்பதென்ன பாடு மரணம் எது வந்தாலும் பரம ன் வார்த்தைகள் போதும் - என தொடரும் சீடர்கள் வேண்டும்
3. மரித்த மனிதர் ஆவியாகி உலாவுவார் வந்து பேசுவார் - என பிதற்றும் மனிதனின் பாராட்டு வார்த்தைகள் விலக்கி நடந்திட வேண்டும் வாழும் வரைக்கும் வசனம் ஒலியில் வாழ்வு ஒளிர்ந்திட வேண்டும் - ஜீவ வசனம் பாதைக்கு தீபம்
4. வானம் சென்றவர் இயேசுவையன்றி ஒருவரிலையென வேதம் சொன்னது வானம் சென்று திரும்பி வந்தவர் மறந்து போனதென்ன அவர் வார்த்தை , ஆவி, ஜீவன் வேறு நமக்கெது வேண்டும் - திரு வார்த்தை நமக்கு போதும்
5. திருமறை கடல் ஆழம் மூழ்கி அழகு முத்துக்கள் எடுப்பதன்றி அரைத்த மாவை அறைக்கும் மனிதன் வார்த்தை மறந்திட வேண்டும் அடுத்த வாரம் இயேசு வருகிறார் - என கணக்கு சொல்லிடும் கூட்டம் - நீ ஒதுங்கி சென்றிட வேண்டும்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam