புல்லைப் போல்
pullaip pol
புல்லைப் போல் உலர்ந்திடும் வாழ்க்கை பூவைப் போல் மறைந்திடும் வாழ்க்கை புவி வாழ்வின் மேன்மைகள் ஒன்றுமில்லை நிலையான வாழ்வு இங்கே இல்லை
பிறக்கும்போதும் இறக்கும்போதும் மனிதன் கரங்களில் ஒன்றுமில்லை கொண்டு வந்ததில்லை கொண்டு போவதில்லை கண்கள் காண்பதன்றி பலன் இல்லை
போதும் என்கிற மனதுடனே தேவபக்தியாய் வாழ்ந்திடுவோம் நித்திய வாழ்வினை நோக்கிடுவோம் இயேசுவை அனுதினம் தேடிடுவோம்
மாயை மாயை தான் எல்லாம் மாயை தான் மாயலோகமாம் இவ்வுலகில் நேற்று வாழ்ந்தவர் இன்று இல்லையே நாளை நடப்பதை நாம் அறியோம்
நாளை என்பது நமது அல்ல நமது ஜீவன் நம் கையில் அல்ல நல்லவராம் நம் இயேசுவிடம் நமது வாழ்வினை கொடுத்திடுவோம்
உலகம் அனைத்தையும் சொந்தமாக்கியும் நமது ஜீவனை நாம் இழந்தால் லாபம் ஏதுமில்லை மேன்மை ஒன்றுமில்லை வாழ்ந்த வாழ்க்கையால் பயனில்லை
அகிலம் அனைத்திற்கும் ஆண்டவராம் இயேசு ஒருவரே இரட்சகராம் வழியாய் ஒளியாய் வந்தவரை உள்ளத்தில் ஏற்றிட உறுதி கொள்வோம்
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal