புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள்
pudhidhaay pirandha mazhalaigal naangal
புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள் வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள் - 2 தாய் தந்தை யாருமில்லையே பேசாமல் கண்ணீரும் காவியம் பாடுதே - 2
1. உணவும் உடையுமின்றி உறவும் உறக்கமின்றி உயிர்கள் நாங்கள் வாழ்கிறோம் - 2 உணர்வை புரிந்துகொள்ள யாருமில்லையே - இங்கு உதவி செய்யும் இதயமில்லையே - 2
2. தாய் பாலை ருசித்ததில்லை, தகப்பனை கண்டதில்லை - 2 யார் செய்த பாவமோ ஒன்றுமே புரியவில்லை - 2 கைப்பிடித்து விளையாட யாருமில்லையே - இங்கு கதறி அழ வழியுமில்லையே - 2
3. ஊரும் உலகமும் அனாதையாக்கிடுச்சு.. என் பேரை சொல்லி சிலர் பணமும் வாங்கியாச்சு - 2 தேகமெல்லாம் உருகி போகுதே எங்கள நேசித்திட யாருமில்லையா? - 2
புதிதாய் பிறந்த மழலைகள் நாங்கள் வேரின்றி முளைத்த பயிர்கள் நாங்கள் - 2 எங்கள தேடி இயேசு அப்பா வந்தாங்க.. எங்க கண்ணீர தொடச்சு அள்ளியணச்சாங்க - 2 இந்த அப்பாவ போல யாருமில்லையே.. இயேசு அப்பா மட்டுமே எனக்கு போதுமே - 2
எங்க அப்பாவும் அம்மாவும் எல்லாமும் நீரே உங்க மார்பிலே... மடியிலே சாய்ந்திருப்பேனே.. - 2 உங்க மார்பிலே... மடியிலே சாய்ந்திருப்பேனே.. நான் சாய்ந்திருப்பேனே.. - 2
More from Aruvadai
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Beviston · Aruvadai
- அல்லேலூயா என் ஆத்துமாவேalleluya en aathumaavaePr. Beviston · Aruvadai
- அழைத்தவரே நீர் நடத்திடுவீர்azhaithavarae neer nadathiduveerPr. Beviston · Aruvadai
- உமது கரத்தில் விழுகின்றோமைய்யாumadhu karathil vizhugindromaiyyaaPr. Beviston · Aruvadai
- உம்மாலே நான் ஒருummaalae naan oruPr. Beviston · Aruvadai
- உம்மோடு இருப்பதும்ummodu iruppadhumPr. Beviston · Aruvadai
- உயிர்த்தெழுந்தார் இயேசு ஜெயித்தெழுந்தார்uyirthezhundhaar yesu jeyithezhundhaarPr. Beviston · Aruvadai
- உள்ளங்கையில் வரைந்தவரேullangaiyil varaindhavaraePr. Beviston · Aruvadai