பிறந்தார் இயேசு நமக்காய்
pirandhaar yesu namakkaay
1. பிறந்தார் இயேசு நமக்காய் இரட்சகராக பிறந்தார் இயேசு நமக்காய் நம்மை இரட்சித்திடவே இரட்சகரான தேவன் - 2 பெத்லகேம் ஊரதிலே ஏழைப் பிள்ளையாகவே
2. பரலோகின் மகிமை விட்டு இப்பூவுலகில் பரலோகின் தேவன் பிறந்தார் மாட்டுத் தொழுவம் தனில் மனுஷனாய் அவதரித்தார் - 2 மகா மகிமையின் தேவனாம் நம் கர்த்தர்
3. உன்னதத்தின் தேவனுக்கு மகிமையும், பூமியில் சமாதானமும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று -2 தேவதூதர் தேவனைத் துதித்துப் பாடினர்
4. மாட்டின் முன்னணைதனிலே கந்தைத்துணிகள் சுற்றப்பட்டவராக மாடி வீடுகளுடைய மகா மகிபர் - 2 மந்தை மேய்ப்பர்கள் மகிழ்ந்திடக் காட்சி தந்தார்
5. தம் சிங்காசனத்தையும் கிரீடங்களையும் ஆளுகையும் துறந்து நம்மோடிருந்திடவே இம்மானுவேலராக - 2 கிறிஸ்து இயேசு நாதர் இவ் உலகில் பிறந்தார்
6. அதிகாரம் ஐசுவரியம் கனம் உயர்வும் மகிமை மகத்துவமும் அழகு சவுந்தரியம் யாவையும் விட்டுவிட்டு - 2 அடிமையாய் அவதரித்தார் நமது அன்பின் தேவன் - பிறந்தார்
7. கிழக்கிலுள்ள சாஸ்திரிகள் விந்தையான ஓர் நட்சத்திரத்தைக் கண்டு கிறிஸ்து பிறந்தார் என்று திட்டமாய்த் தாம் அறிந்து - 2 கிறிஸ்துவைப் பணிந்துகொள்ள கால்நடையாய்ச் சென்றனர்
8. சாஸ்திரிகள் சாஷ்டாங்கமாய் விழுந்து பிள்ளையாம் இயேசுவை தொழுது கொண்டு பொன்னும் தூபவர்க்கமும் வெள்ளைப்போளம் - 2 மிகப் பணிந்து காணிக்கையாக வைத்து வந்தனர்
9. ராஜாவும் தேவனுமான கிறிஸ்து பாடுபட்டு மரித்து அடக்கம் பண்ணப்படுவார் என்று தாம் முன்னறிந்து - 2 பொன் தூபவர்க்கம் வெள்ளைப்போளம் வைத்தனர்
10. சுகம் பெலம் ஆறுதல் சமாதானம் சந்தோஷம் யாவும் பெற்று பரிசுத்தத்தோடு நாம் பரலோக பாக்கியம் பெற - 2 நம் பாவ துக்கங்களைத் தாமே சுமக்கப் பிறந்தார்
11. எல்லோரும் எப்போதும் என்றென்றும் களிகூர்ந்தானந்தித்து சதாகாலமும் மிக சந்தோஷமாய் வாழவும் - 2 சந்தோஷத்தின் நற்செய்தியோடு தாமே பிறந்தார்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj