பிள்ளையை வளர்க்க
pillaiyai valarkka
பிள்ளையை வளர்க்க தெரிஞ்சிக்கணுமா தாயே - உம் காமம் ஏதும் காணலையே பிள்ளையின் பிறக்கையிலே இல்லாத கள்ளமெல்லாம் இடையினிலே வந்ததென்ன
1. பச்ச பிள்ளை அழுகையிலே பசிக்குரல் கொடுக்கையிலே பூச்சாண்டி பேர சொல்லி பொய்யாக மிரட்டிடாமல் - பிள்ளையை
2. அடிதடி சண்டையிட்ட அவனெதிரில் கூச்சலிட்டு அப்படியே சண்டையிடும் கெட்டப் பிள்ளையாக்கிடாமல் - பிள்ளையை
3. சின்ன சின்ன பொய் பேசி சிங்காரமாய் சிரிக்கையிலே சீரழிக்கும் பாதையது சிறுப் பிள்ளையவன் நடந்திடாமல் - பிள்ளையை
4. கெட்ட கெட்ட வார்த்தைகள் சத்தமிட்டுப் பேசும் போது கெட்டிக்காரன் என்று சொல்லி முற்றாக அழித்திடாமல் - பிள்ளையை
5. ஆண்டவரைப்போல அவன் அநுதினம் வளர்ந்திடவே கண்ணீர் பெருக்கி நிதம் ஜெபித்து வேதம் சொல்லும் வழியில் - பிள்ளையை
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam