பெத்லகேம் ஊரதிலே
pethlagem ooradhilae
பெத்லகேம் ஊரதிலே மாட்டுத் தொழுவத்திலே தேவ சுதன் பிறந்தாரே - நம் தேவனாம் கிறிஸ்து பிறந்தாரே கர்த்தரும் இரட்சகரும் மீட்பருமான - 2 மகிமையின் தேவன் பிறந்தாரே - 2
மனிதரில் ஒருவரும் கண்டிராதவரும் காணக்கூடாதவருமான - நம் தேவாதி தேவன் பிறந்தாரே தேவ கோபம் போக்கிடவே - 2 தேவ குமாரன் பிறந்தாரே - 2
சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிற ஒளியாம் இயேசு பிறந்தாரே - மெய் ஒளியாம் தேவன் இவர்தானே நம்மைப் பிரகாசிப்பிக்கும் மெய் தேவன் அவரே நம்மைக் காண்கிற தேவன் இவரே - 2
தாம் ஒருவரே ஞானமுள்ளவர் தாமே மகா பெரியவர் - நம் தாழ்வில் நம்மை நினைப்பவர் தம்மாலே தாமே தம் தயவால் - 2 நம் சாபம் நீக்கப் பிறந்தாரே 2
கவலை கண்ணீர் தீர்க்கக் கர்த்தர் பிறந்தனரே களிகூர்ந்து மகிழுவோம் கர்த்தரைப் பாடிப் போற்றிடுவோம் கர்த்தர் கிருபையால் நிறைந்திடவே - 2 கர்த்தரின் பாதம் பணிந்திடுவோம் - 2
விண்ணின் மகிமையை மண்ணோர்க்களித்திடவே மண்ணுலகில் அவதரித்த தேவன் - நம்மை விண்ணுலகில் சேர்க்கவரும் தேவன் துதி கனம் மகிமை! - 2 ஆமென்! அல்லேலூயா! ஆமென்! - 2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj