பெலவீன நேரத்திலே
pelaveena nerathilae
பெலவீன நேரத்திலே பெலன் தாரும் என் தெய்வமே உம்கிருபை பொழியுமய்யா உலகினில் எனக்கது போதுமய்யா
1. சிற்றின்ப சேற்றினில் சில வேளையில் சிக்குண்டு சோர்ந்திட நேர்ந்திடுதே உமதாவி வல்லமை மறைந்திடுதே ஒரு விசை மாத்திரம் இரங்குமய்யா - இந்த
2. நிர்பந்த மானவன் நான் தானய்யா நிலையின்றி தடுமாறும் நிலை ஏனைய்யா பெலனின்றி தவித்திடும் எனைபாரய்யா பெலன் தந்து நிலைத்திட அருளுமைய்யா - உந்தன்
3. விசுவாச பாதையில் நான் செல்கையில் விரும்பாத செயல் வந்து தடை செய்யுதே திரும்பாமல் நடைபோட பெலன் இல்லையே திருக்கரத்தால் என்னை தாங்குமய்யா - உந்தன்
4. நிழல் போல பாவங்கள் தொடர்கின்றதே புயல் போல சோதனை எதிர்க்கின்றதே உமையன்றி யாரிடம் நான் செல்லுவேன் உண்மையை உம்மிடம் தான் சொல்லுவேன் - மன
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal