பயணியின் நண்பனே
payaniyin nanbanae
பயணியின் நண்பனே பாதை தெரிந்தவரே என் இலக்கை அறிந்தவரே வழி விளக்காய் வந்தவரே
என் தோணி அக்கரை சேருமோ? வழியில் மாளுமோ? திகில்களால் நான் கலங்கி நின்றேன்! என் படகில் நீர் இருக்கும்பொழுது சேதம் ஆகுமோ? என் பாதை மாறுமோ?
1. வழித்துணையாய் வருவேன் என்று சொன்னவர் ஏறாளம் வாக்கை நம்பி இடறி விழுந்த தவனைகள் தாராளம் - 2 வழித்துணையாய் என்னோடு வழிமுழுதும் வருவீரா? தொடங்கிய என் பயணத்தை பூர்த்தி செய்து தருவீரா? (2 தருவீர்)
2. பெரும் அலைகள் படகை சூழ்ந்து சேதப்படுத்தினாலும் கடும் புயல்கள் எந்தன் விசையை நாசப்படுத்தினாலும் - 2 படகோடு அமிழாமல் விரைவாக வருவீரே நடுவழியில் கைவிடாமல் நிறைவாக்கி தருவீரே - 2
3. வெகுதூர பயணம் என்னை சோர்வாக்கினாலும் சிலவேளை திசையை நான் தவறவிட்டாலும் - 2 வழியெல்லாம் என்மீது விழிவைத்து காப்பீரே துறைமுகத்தை சேரும்வரைக்கும் துணையாக வருவீரே
என் தோணி அக்கரை சேர்ந்திடும் வழியில் மாளாதே திகில்களின்றி நான் தொடர்ந்து செல்வேன்! என் படகில் இயேசு இருக்கும்போழுது சேதம் ஆகாதே, என் பாதை மாறாதே
More from URYM Songs
- அறுவடைக்கு எஜமானனேaruvadaikku ejamaananaeURYM Songs
- இம்மட்டும் ஜீவன் தந்த நாயகாimmattum jeevan thandha naayagaaURYM Songs
- இஸ்ரவேலை காக்கிற தேவன்isravelai kaakkira devanURYM Songs
- ஈடும் இல்லை இணையும்eedum illai inaiyumURYM Songs
- உந்தன் ஆவியாலேundhan aaviyaalaeURYM Songs
- உம்மால் கூடாதது ஒன்றும்ummaal koodaadhadhu ondrumURYM Songs
- உம்மைப் போல் உம்மைummaip pol ummaiURYM Songs
- உம்மோடுதான் உம்மோடுதான்ummodudhaan ummodudhaanURYM Songs