பானையிலே சோறெடுத்து
paanaiyilae soreduthu
பானையிலே சோறெடுத்து பாதையிலே போற பொண்ணு - 2 பக்கபலமாக இயேசிருக்கார் பயந்து விடாதே உன் அக்கம் பக்கம் ஆபத்துன்னு கலங்கி விடாதே - 2
கன்னத்துல கைய வைச்சு மன்னன் நினைக்கையிலே மன்னாதி மன்னன் இயேசு மனசுக்குள் வந்தாரு -(2) என்னென்னமோ பேசணும்னு என் மனசு நினைக்கையிலே -(2) கண்ணே மணியே ரூபவியே என்றழைச்சாரு என் கன்னத்துல முத்தமிட்டு அரவணைச்சாரு -(2)
வெயில் என் மேல் பட்டவுடன் கருப்பாநா போயிட்டேன்னு வெறுப்பா பார்க்காம விருப்பப்பட்டாரு -(2) அறுப்புக்காலத்துல வரப்புல நடக்கையில -(2) பாதம் கல்லில் இடறாமல் தங்கி சென்றாரு என் பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு -(2)
காலங்கள் பல ஆண்டு கடந்தே போனாலும் கர்த்தாவே உன் அன்பு என்றுமே மாறவில்லை -(2) உள்ளத்தைக் கொள்ளைகொண்ட வெள்ளை அங்கி மன்னவனே -(2) அல்லும் பகலும் உமக்காக காத்திருப்பேன் எனை அணைத்துக் கொண்டு முத்தமிட சீக்கிரம் வாரும் ஐயா-(2)
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae