பாடுபட்டால் பலனிருக்கு
paadubattaal palanirukku
பாடுபட்டால் பலனிருக்கு உழைக்கும் போது உயர்விருக்கு உண்மை என்றும் உறங்காதடா - இந்த சத்தியத்துக்கு சில நேரம் சங்கடங்கள் வரலாம் - என்றும் பொய்மை இங்கு நிலைக்காதடா - உலகில்
1. உழைக்கும் எண்ணம் இல்லாதவன் உண்ணலாகுமா-இதை மறந்தவனை மனிதன் என்று சொல்லலாகுமா போதும் என்ற மனமிருந்தால் இழப்பு வந்திடுமா - இறை பக்தியோடு வாழும்போது தீமை அண்டிடுமா - பாடு
2. வருத்தப்பட்டு பாரம் சுமந்து தவிக்கும் மனிதர் - தம் சிலுவை சுமக்க மனமில்லாத சீடரானிரோ கானாவூரின் கல்யாணத்தில் கனிரசமருந்தி தானாய் முளைத்த மரமாய் கனி தரமறந்தீரோ -இங்கு-பாடு
3. உடுத்தும் உடை படுக்கும் இடம் தேடும் உலகிலே - நீ கொடுத்திடாமல் கேட்டிடவே நினைப்பது தகுமோ ஏற்பது இகழ்ச்சி ஆனால் கொடுப்பது புகழ்ச்சி - என அமுக்கி குலுக்கி மடியில் சரிந்து விழும்படி பெறுவோம்-பாடு
4. ஊரைச் சுற்றி கடன் வாங்கி தவிக்கும் மனிதரே உங்கள் கடனை தீர்க்க இயேசு இரட்சகர் இறங்கவேண்டுமோ ஊருக்கெல்லாம் கடன் கொடுப்போம் வாங்காதிருப்போம்-ஊர் ஏழைக்கிரங்கி இயேசவுக்கே கடன் கொடுத்திடுவோம்-பாடு
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam