ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
osannaa osannaa osannaa
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா கர்த்தராம் இயேசு பவனி சென்றனரே ஓசன்னா! ஓசன்னா! - ஆ! ஆ
ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமான கிறிஸ்து கழுதைக் குட்டியின் மேல் பவனி சென்றனரே ஓசன்னா! ஓசன்னா! ஆ! ஆ!
நித்தியானந்தம் உள்ள ஏக சக்கராதிபதியாம் இயேசு தம்மைத் தாழ்த்தி வெறுமையாக்கினரே ஓசன்னா! ஓசன்னா! - ஆ! ஆ
சீயோன் குமாரத்திகள் மிகவும் களிகூர்ந்து கெம்பீரித்து கர்த்தரைத்துதித்து ஆர்ப்பரித்தனரே ஓசன்னா! ஓசன்னா! - ஆ! ஆ
வழியில் வளஸ்திரங்களை விரித்தும் மரக்கிளைகள் பரப்பியும் குருத்தோலைகள் பிடித்துக் கொண்டும் ஓசன்னா பாடினரே - ஆ! ஆ
முன் நடப்பாரும் பின் நடப்பாரும் மிகத் திரளான ஜனங்கள் உன்னதத்திலே ஓசன்னா என்று மகிழ்ந்து ஆர்ப்பரித்தனரே ஆ! ஆ
கர்த்தரின் நாமத்தினால் வரும் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் அவரையே என்றென்றும் ஸ்தோத்திரிப்போமே ஓசன்னா! ஓசன்னா! ஆ! ஆ
பாலகர் குழந்தைகள் வாயினால் துதி உண்டாகச் செய்தீர் ஸ்தோத்திரம் துதிகள் முழங்கிடச் செய்தீரே ஓசன்னா! ஓசன்னா ! ஆ! ஆ
ஓசன்னா! ஓசன்னா! ஓசன்னா அல்லேலூயா! ஓசன்னா கிறிஸ்து இயேசு நாதருக்கே அல்லேலூயா! ஓசன்னா! - ஆ ! ஆ !
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj