நிறைவேற்றியருளும் தேவா
niraivetriyarulum devaa
நிறைவேற்றியருளும் தேவா உம் வாக்குத்தத்தங்களை
வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற வல்ல வாக்கு மாறாத எங்கள் தேவனே வாக்குத்தத்தங்களை நிறைவேறச் செய்யும் வல்லமையின் தேவனே - எங்கள்
ஆம் என்றும் ஆமென் என்றும் உமக்குள் இருக்கிறதான உறுதியும் உண்மையுமான உம் வாக்குத்தத்தங்களை - தேவா
முன்மாரியும் பின்மாரியுமான பரிசுத்த ஆவியின் மழையதனை மின்னல் இடி முழக்கத்துடனே முழுதுமாய்ப் பெய்தருள்வீர் - தேவா
கடைசி நாட்களில் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று யோவேலினால் உறுதியாய் உரைத்தீரே - தேவா
உங்கள் குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் உரைப்பர் என்றும் தரிசனங்கள் சொப்பனங்களையும் காண்பர் என்றும் உரைத்தீர் தேவா
என்னுடைய ஊழியக்காரர் ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று உரைத்தீர் உறுதியாய் - தேவா
உயர வானத்திலும் தாழ பூமியிலும் அற்புத அடையாளங்களையும் பெரிய அதிசய செயல்களையும் செய்வேன் என்றீரே - தேவா
ஆதி சபையில் ஆத்துமாக்கள் திரள் திரளாய் இரட்சிக்கப்பட்டு ஆவியின் அபிஷேகம் பெற்றது போல் அதிகமாய்க் கிரியை செய்வீர் - மிக
ஆத்மீக மழையா பரிசுத்த ஆவியின் மழையால் தாகம் தீர்க்கப்படும் தேவ அன்பினால் நிறைக்கப்பட தேவரீர் கிருபை செய்வீர் - எம்
குருடன் பார்க்கவும் ஊமையன் பேசவும் செவிடர் கேட்கவும் கிரியை செய்வீர் சப்பாணிகள் குதித்து நடக்கவும் சர்வாங்க சுகமளிப்பீர் - தேவா
மரித்தோர் உயிர்த் தெழுந்திடவும் குஷ்டரோகம் குணமாகிடவும் பாவ ரோகக் கேடுகள் நீங்கி பரிசுத்தமடைந்திடவும் - யாவரும்
அகிலமெங்கும் ஆத்துமாக்கள் அலை அலையாய் திரண்டிடும் அன்பரின் ராஜ்யத்திற்குள்ளாகி அன்பரின் மகிழ்ந்திடுவோம் - என்றும்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj