நீர் போதும் தேவா நீர் போதுமே
neer podhum devaa neer podhumae
நீர் போதும் தேவா நீர் போதுமே உந்தன் சமூகம் வேண்டுமே-2 உம்மை அல்லாமல் யாருண்டு எனக்கு நீர் போதும் நீர் போதும் நீரே போதும்.
ஆகாரை போல் திரிந்தலைந்தேன் அழுதேன் புரண்டேன் ஒருவரில்லை -2 உம்மையன்றி ஒருவருண்டோ இப்புவியில் என் தெய்வமே -2 நீர் போதும் நீர் போதும் நீரே போதும்.
துக்கத்தில் பிறந்த யாபேசை போல் எதிர்காலம் இன்றி ஏமாந்து போனேன் -2 உம்மை நம்பி ஓடிவந்தேன் ஆதரித்தீரே என் இயேசுவே -2 நீர் போதும் நீர் போதும் நீர்போதுமே
யாக்கோபைப் போல் காரிருள் நேரத்தில் தனிமையில் அகப்பட்டு தவித்தபோது -2 கைவிடா நேசர் நீர் என்னோடே கவலையில்லை இப்புவியில் - 2 நீர் போதும் நீர் போதும் நீர் போதுமே
More from Udhavidum Nesar
- அப்பா இயேசப்பாappaa iyesappaaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- இயேசு போதுமே இயேசுyesu podhumae yesuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- எந்த நாளும் உம்மை பாடிடendha naalum ummai paadidaPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- என் தேவனே எனக்கிறங்கும்en devanae enakkirangumPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கரங்களை தட்டுவோம்karangalai thattuvomPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- கல் நெஞ்சமே கல் நெஞ்சமேkal nenjamae kal nenjamaePr. PJM. Stephen Raj · Udhavidum Nesar
- காலம் உனக்கு இருக்கிறதுkaalam unakku irukkiradhuPr. PJM. Stephen Raj · Udhavidum Nesar