நீதிமானின் கூடாரத்தில்
needhimaanin koodaarathil
நீதிமானின் கூடாரத்தில் கெம்பீர சத்தம் யாக்கோபின் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் தம்புரு கிண்ணரம் வீணை யோடு துதிகள் ஆயிரம் - நான் துதிக்கும் நாவு எழுப்பிடுதே இனிய சங்கீதம் - நீதி
1. பறவை பாடுதே நீ பாட கூடாதா - அந்த இயற்கை துதிக்குதே நாம் துதிக்க கூடாதா - நம் பாடு மரணம் ஏற்க இயேசு பிறந்ததினாலே - நம் பாவமெல்லாம் பறந்து போச்சு பாடிடுவோமே - நீத
2. நோய்கள் பேய்கள் வேதனைகள் உனக்கு ஏனம்மா - எங்கள் இயேசு நாதர் சுகங்கொடுப்பார் உனக்கு தெரியுமா - நம் இயேசு கூட இருக்கும் போது கவலை ஏனம்மா - அவர் கரம் பிடித்து நடக்கும் போது கலக்கம் வீணம்மா -நீதி
3. புதிய வல்லமை புதிய கிருபை எனக்கு வேண்டுமே அதை கொடுக்கும் தேவ தேவனை நான் துதிக்கவேண்டுமே புதிய நன்மை தினமும் என்னை தொடரவேண்டுமே ஜீவனிருக்கும் வரையில் உமது வீட்டில் நிலைக்கவேண்டுமே நீதி
4. ஆடிப்பாடுவேன் கூடி நடனமாடுவேன் - என்னை தேடிவந்த தேவனையே போற்றிபாடுவேன் தாளத்தோடும் மேளத்தோடும் கீதம்பாடுவேன் எக்காளம் ஊதி எரிகோ மதிலை இடித்து போடுவேன் - நீதி
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam