நீ ஆசீர்வாதமாய் என்றும்
nee aaseervaadhamaay endrum
நீ ஆசீர்வாதமாய் என்றும் இருப்பாய் - 4
1. நீர்வளம் குறையாத வண்டல் வயல் போல் வற்றாத நீர் ஊற்று பொங்கும் துறவு போல் வாழையடி வாழையாய் வளம் பெறும் குடும்பமாய் இயேசு உன்னை ஆசீர்வதிப்பார்
2. மழைபொழிந்திடும் மேகம் போல் கனி நிறைந்திடும் விருட்சம் போல் பரம்பரை பரம்பரையாய் வாழும் குடும்பமாய் இயேசு உன்னை ஆசீர்வதிப்பார்
3. வகை வகை வளர்க்கும் பூங்கா போல் தொகை தொகை தொடர் கொண்ட சிகரம் போல் காலா காலமாய் உயர்ந்து நிற்கும் குடும்பமாய் இயேசு உன்னை ஆசீர்வதிப்பார்
4. காற்று அலையில் விரைந்திடும் ஒலி போல் கற்பதில் திரண்டிடும் கருத்து போல் குலம் குலமாய் குதூகலம் அடையும் குடும்பமாய் இயேசு உன்னை ஆசீர்வதிப்பார்
5. பறவைகள் பறப்பதில் பரவசம் போல் மீன்கள் நீந்துவதில் மகிழ்வது போல் நிரந்தரம் நிரந்தரமாய் நிலைபெறும் குடும்பமாய் இயேசு உன்னை ஆசீர்வதிப்பார்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal