நம்பி வந்தால் இயேசு
nambi vandhaal yesu
நம்பி வந்தால் இயேசு உன்னை தள்ளவே மாட்டார் நம்பினோரை காத்திடும் தேவன் உறங்கவே மாட்டார்
ஞான கன்மலை நாயகன் இவரே தாகம் தீர்த்திடும் ஓடையும் இவரே காயம் ஆற்றிடும் ஒளஷதம் இவரே நோய்க்கும் பேய்க்கும் எதிரிடை இவரே மயக்கும் மாமிசம் ஜீவன பெருமை ஒழிக்க சிலுவை சுமந்தவரை நீ - நம்பி வந்தால்
தேவ செவிகள் திறந்தே இருக்கும் எமது ஜெபங்கள் ஏற்றிடவே எமக்கு அடைக்கலம் தாபரம் இவரே ஞான இதயம் அருளிடும் தேவன் திரும்பி வருகின்ற திரித்துவ நாதன் வாழ்வெலாம் களிகூர்ந்திட செய்வார் - நம்பி வந்தால்
சாய்ந்து போகும் நிழலது போலே உலர்ந்து உதிர்ந்திடும் மலர்களைப் போலே சால்வை போல் புவி மாறிவிட்டாலும் மாறிடாத எம் மகத்துவ ராஜன் உமது ஆண்டுகள் முடிவதில்லை-எமை தேவ கரங்கள் விடுவதும் இல்லை - நம்பி வந்தால்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam