நம்ப முடியா உலகம்
namba mudiyaa ulagam
நம்ப முடியா உலகம் தான டா- இது நம்ப முடியா உலகம் தானடா பளபளக்கும் மினுமினுக்கும் பழம் போல் பல்லிளிக்கும் நம்பி நீ கை நுழைத்தால் பாம்பென படமெடுக்கும்
1. பொய்யான வார்த்தை சொல்லி மதம் மாற்றுவார் - எங்கள் மெய் தெய்வம் இயேசு உந்தன் மனம் மாற்றுவார் பாடு துன்பம் இந்த உலகில் பேரின்பம் அந்த உலகில் தந்திடுவார் நம்பி வந்திடுவாய்
2. ஐஸ்வர்யம் பெருக என்று இவர் கூறுவார் - சிலர் அதின்மேல் நம்பிக்கை வைத்தே தடுமாறுவார் தீமைக்கு அது வேராகும் தீயவர்க்கு சொந்தமாகும் கண்டிடுவாய் வேதம் நம்பிடுவாய்
3. மெய்யுலகம் சேர்க்க இயேசு வழிகாட்டுவார் - பலர் பொய்யுலக வாழ்வு இதில் சுகம் தேடுவார் பாடு துன்பம் சாபம் என்பார் மெய்வழியை மறைத்திடுவார் தப்பிடுவாய் நீ தப்பிடுவாய்
4. செங்கடலை பிளந்துவிட்டது மோசேயின் கோலோ - அந்த கோலியாத்தை வீழ்த்தியதும் தாவீதின் கல்லோ போவாசின் அன்னையவள் ராகாபை வேசியென்பார் என்ன சொல்வேன் நான் என்ன சொல்வேன்
5. சத்தியத்தை சிலுவையிலே மீண்டும் அறைவார் - இயேசு சிலுவையில் சிந்திய இரத்தத்தை காலால் மிதிப்பார் நன்மை செய்யும் இயேசுவையும் வெண்கல சர்ப்பம் என்பார் என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam