நம் இயேசு முன் செல்லும்
nam yesu mun sellum
நம் இயேசு முன் செல்லும் கிறிஸ்து இயேசு அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் வல்லமையுள்ள தேவன் நித்திய தேவனே சமாதான பிரபு நம் வாழ்நாளிலே!
1.பொழிந்திடும் கிருபையால் மகிழ்ந்திடும் ஜெயம் பெற்றோம் தூணிலே கட்டினால் அசைத்து தள்ளுவோம் அக்கினியில் எறிந்தால் அங்கே உலாவுவோம் காவலில் அடைத்தால் அங்கே பாடுவோம்
2.வளர்ந்திடும் கிருபையால் நன்மையில் பெருகிடுவோம் சாட்சியைத் தடுத்தால் வேகமாய் சொல்லுவோம் கூக்குரல் எழுந்தால் கூவியே சொல்லுவோம் ஏற்றிட மறுத்தால் எண்ணியே சொல்லுவோம்
3.விளைந்திடும் கிருபையால் பூரண மீட்படைந்தோம் கடல் ஆழம் கண்டவர் தூக்கியே எடுத்தார் பாதாளம் சென்றவர் பரதீசை கொடுத்தார் வானத்தில் பறந்தவர் வல்லமையைத் தந்தார்
4.நித்திய கிருபையால் தினம் தினம் போற்றிடுவோம் தூக்கி எறிந்தால் உலகத்தைக் கலக்குவோம் தாக்கிட வந்தால் தேசத்தைக் கலக்குவோம் ஏற்றிட வந்தால் பணிந்து இணங்குவோம்
5.நிறைந்திடும் கிருபையால் முடி சூடும் நிலை பெற்றோம் அடித்து உதைத்தால் ஆடியே பாடுவோம் கட்டியே இழுத்தால் துதித்துப் பாடிடுவோம் கப்பலே சிதைந்தால் அக்கரை ஏறுவோம்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal