நான்தேடும்போது அருகிலிருக்கும்
naandhedumbodhu arugilirukkum
நான்தேடும்போது அருகிலிருக்கும் ஆண்டவர் என்னைத்தேடி வந்து சிலுவை மரத்தில் மாண்டவர் என்னைத்தேடி வந்ததால் வன்சிலுவை சுமந்ததால் - ஒரு தாயைப் போல அன்பு காட்டி அரவணைத்தவர் - அந்த பேய் வாயிலகப்படாமல் என்னைத் தடுத்தவர்
1. மாயலோக வாழ்வை நம்பி மாண்டிடாமல் என்னைக் காத்தவர் ஆயனாகி ஆட்டைப்போல் - தம் கோலினாலே என்னை மேய்த்தவர் - அடி காயம் ஆற்றியே குணமாக்கும் தேவனே தீயன் எந்தன் தீமை யாவும் சிலுவை மீதிலே பாய்ந்து ஓடும் உதிரத்தாலே தீர்த்த நாதனே
2. இறைவன் பாதம் நாடிதேடி உலகம் இன்று ஓடும்போதிலே குறைகள் யாவும் நிறைவாக்கிட எம்மைத் தேடி வந்த தேவனே விடி காலை கிருபைகள் புதிதாக வழங்கினீர் வாடி வதங்கும் பயிர்களாகி மாய்ந்திடாமலே - ஒரு செடியில் இணைந்த கொடிகளாகி கனிகள் வழங்கவே - நான்
3. துருகமாகி நீதிமானை காக்கும் நல்ல நீதி தேவனே - ஒரு மிருகம் போல வாழ்ந்த என்னை மனிதனாக்கி மகிழும் தேவனே எனக்காக யாவையும் செய்து முடிக்கும் ஆண்டவா ஜீவன் இருக்கும் நாட்கள் வரையில் உமக்குள் ஜீவிப்பேன் - என் ஜீவனுள்ள தேவனே நீர் விரைந்து வாருமே - நான்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam