நான் உன்னை தேடி வந்தேன்
naan unnai thedi vandhen
நான் உன்னைத் தேடி வந்தேன் நீ என்னைத் தேடவில்லை நான் உனக்காய் ஏங்கி நின்றேன் நீ என்னை நினைக்கவில்லை உனக்காக என் உள்ளம் கொதிக்கின்றது உனக்காக என் உள்ளம் தவிக்கின்றது
1.கண்விழிக்கும் காலைநேரம் கதவண்டை நான் காத்திருந்தேன் கிருபை பெலனும் ஞானம் தந்து நாளெல்லாம் உன்னை நடத்த வந்தேன் நீ இன்னும் எழவில்லையே ஏழுந்தென்னிடம் வரவில்லையே
2.என்னோடு பேச நான் அழைத்த போது உலகம் , வேலை என்று ஓடினாயே உறவும் ஊழியமும் முக்கியம் என்று முதன்மையாய் என்னை தேட மறந்தாய் என் கண்கள் உன்னை தேடுதே என்னையே நீ தேடுவாயா
3.உனக்காக நான் உயிரை தந்தேன் எனக்காக நீ என்ன செய்தாய்? உனது குறையை நான் பார்க்கவில்லை உனது செல்வம் நான் கேட்கவில்லை உன்னையே கேட்கின்றேன் என்னிடம் நீ வருவாயா
4.பர்வதங்கள் திராட்சை ரசம் பொழிந்திடுமே மலைகள் பாலாய் ஓடிவருமே ஆறுகள் கரைபுரண்டு ஓடிடுமே கர்த்தரின் ஊற்று புறப்படுமே பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கிடுமே -(நானோ )
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal