அசைக்கப்படுவதில்லை
asaikkappaduvadhillai
அசைக்கப்படுவதில்லை - நான் அசைக்கப்படுவதில்லை பெருவெள்ளம் வந்து பெரும் காற்று வீசி என் மீது மோதினாலும் அழிவதில்லை
காரணம் என் இயேசுவே நம்பிக்கை என் இயேசுவே கன்மலை என் கிறிஸ்துவே அஸ்திபாரமும் என் கிறிஸ்துவே
1. நோவாவுக்கோ கர்த்தரின் கண்களில் கிருபை கிடைத்தது பெருவெள்ளம் வந்து பூமியே அழிந்தும் குடும்பமே பிழைத்தது கிருபையை பெற்றிடுவேன் தேவனோடு நடந்திடுவேன் அசைக்கப்படுவதில்லையே - நான் அழிந்து போவதில்லையே
2. சத்துருக்கள் என்னை மேற்கொள்ளவிடாமல் கைதூக்கி எடுத்தீர் நான் குழியில் இறங்காமல் உயிரோடு காத்தீர் உம்மையே போற்றுவேன் கோவமோ ஒரு நிமிஷம் உம் தயவோ வாழ்நாளெல்லாம் அசைக்கப்படுவதில்லை - நான் அழிந்து போவதில்லையே
3. எனக்கு முன்பாக நான் கர்த்தரையே வைத்து இருக்கிறேன் அவரே என் இரட்சிப்பும் உயர்ந்த அடைக்கலம் கன்மலையானாரே எக்காலமும் நம்பிடுவேன் இதயத்தை ஊற்றிடுவேன் அசைக்கப்படுவதில்லை - நான் அழிந்து போவதில்லையே
4. பயப்படாதே! சிறுமந்தையே ராஜ்யம் தந்திடுவேன் போரடிக்கும் புது யந்திரமாக கூர்மையாக்கி பயன்படுத்துவேன்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் முகத்தை அன்று நான் கண்டேன்anbin mugathai andru naan kandenBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal