நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
naan unnai aaseervadhippen
நான் உன்னை ஆசீர்வதிப்பேன் ஆசீர் பொங்கிட வாழ்வாய்- 2 ஆண்டாண்டு காலமாய் நன்மை குறையாத வாழ்வினில் செழித்திருப்பாய்
1.மகிமை கொடுமுடி சிகரம் மேகத்தின் நடுவிலே நிற்பேன் என் முக ஒளிக்கதிர் உன்னில் தரிசனம் தந்து ஆசீர் வதிக்கும் என்றென்றும் சுகவாழ்வு துளிர்க்கும் ஆனந்த பாக்கியம் அடைவாய்-நான்
2. கிருபை வல்லமை கிரீடம் கற்பனை வழி சொல்லி வருவேன் என் புயம் என்றும் உன்னை தாங்கி ஆறுதல் தந்து அகமகிழும் பூரண சமாதானம் பெருகும் மனதில் உறுதியும் பெறுவாய்- நான்
3. தீர்க்க தரிசன வெற்றி ஏற்ற காலத்தில் தருவேன் முற்றிலும் ஜீவன் கொண்டு வளர்த்து என் நாமம் தரித்து உன்னை உயர்த்தும் பாலும் தேனும் ஓடும் தேசத்தில் பலன் தரும் சாட்சியாய் திகழ்வாய்-நான்
4. சந்தோஷ நதியின் ஊற்று ஜீவ தண்ணீர் கொண்ட விருட்சம் ஆரோக்கிய வாழ்வில் உன்னைக் காத்து ஆனந்த பாதையில் என்றும் நடத்தும் ஆவியின் அபிஷேகம் கிடைக்கும் அழியாத வழி என்றும் நடப்பாய்-நான்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal