நான் நடந்து வந்த பாதையிலெல்லாம்
naan nadandhu vandha paadhaiyilellaam
நான் நடந்து வந்த பாதையிலெல்லாம் என்னை சுமந்து வந்த நேசர் இயேசுவே கடந்த கால பாவங்களெல்லாம் – கொடும் குருசில் சுமந்து தீர்த்த நேசரே
1. தாயாரின் வயிற்றினில் உருவானமுதல் என்னை தமக்காக தெரிந்து கொண்டு பிரித்தெடுத்தீர் ஒரு தகப்பனை போல் - என்னை சுமந்தவரை தினம் தழுவிடுவேன் - சிறு பிள்ளையைப் போல் மார்போடு அணைத்தவரை பாடிடுவேன் – முழு மனதோடு சேர்ந்தவரை துதித்திடுவேன்.
2. வழிமாறி ஓடி ஒரு ஓடத்திலே கொஞ்சம் இளைப்பாற நினைத்தேன் அடி தளத்தினிலே வலக்கரம் கொடுத்து - எனை எடுத்து மீன் வயிற்றினிலும் - தனி இடங்கொடுத்து அழியாமல் காத்தவரைப் பாடிடுவேன் – வழி விலகாது மீட்டவரைத் துதித்திடுவேன்
3. வெகுதூரம் நடந்தே ஒரு மலையருகில் நான் களைப்பாற சாய்ந்தேன் சூரைச் செடி நிழலில் இரு வேளையிலும் கரும் காகம் கொண்டு சுவை கறியுடனே தினம் அப்பம் கொடுத்து பசி தாகம் தீர்த்தவரை பாடிடுவேன் – எனக்கு இளைப்பாறுதல் ஈந்தவரை துதித்திடுவேன்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam