மேன்மையான எண்ணங்களும்
menmaiyaana ennangalum
மேன்மையான எண்ணங்களும் மகிமையான திட்டங்களும் எனக்காக என் இயேசு சிலுவையிலே தந்துவிட்டார்
1. அன்பான சுவிசேஷம் அறிவிக்கச் சென்றிடுவேன் அன்பராம் இயேசுவின் நாமம் அனல் போல பாய்ந்திடுமே கிருபையின் காலமிதே கல்வாரியை உயர்த்திடுவேன் கண்கண்ட மக்கள் உள்ளம் இரட்சிப்பில் மகிழ்ந்திடுமே
2. ஊக்கமான உபவாசம் உள்ளத்திலே கொண்டிடுவேன் உன்னதர் இயேசுவின் நாமம் உலகெல்லாம் உயர்ந்திடுமே இரட்சண்ய காலமிதே இரட்சகரை புகழ்ந்திடுவேன் காணாத ஆட்டைக் கண்டு திருச்சபை பாடிடுமே
3. வீரிய விசுவாசம் வழுவாது காத்திடுவேன் விண்ணவர் இயேசுவின் நாமம் மின்னலாக ஒளிவிடுமே வேதாகமக் காலமிதே வசனத்தைப் பேசிடுவேன் விண்ணுலகம் இறங்கிடுமே மண்ணுலகம் மறைந்திடுமே
4. பரிசுத்த ஜீவியமே எப்போதும் செய்திடுவேன் பரலோக இயேசுவின் நாமம் பாரெல்லாம் பரவிடுமே எழுப்புதல் காலமிதே இயேசுவை நோக்கிடுவேன் ஏகமாய் என்றும் எங்கும் எழும்பிடும் திருச்சபையே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal