மனுஷனாய் ஏன் அவதரித்தீர்
manushanaay en avadharitheer
மனுஷனாய் ஏன் அவதரித்தீர்? - இந்த மாட்டுக் குடில் தனில் - தேவா பரலோக தேவனே பரம பிதாவே - 2 ஆவியாயிருக்கிற அன்பின் கர்த்தரே - 2
1. ஆதியில் வார்த்தையாயிருந்தீர் - அந்த வார்த்தையே மாமிசமானீர் - தேவா ஆதி அந்தமில்லா ஜோதி பிதாவே - 2 வானங்களைக் கிழித்திறங்கி வந்தீரோ - 2
2. வானம் பூமி யாவும் படைத்தீர் - சர்வ சிருஷ்டிகளையும் சிருஷ்டித்தீர் - இந்த சர்வத்தையும் படைத்தாளும் தேவன் - 2 மாட்டின் முன்னணை தான் உம் படுக்கையோ - 2
3. வார்த்தையால் சர்வமும் தாங்கும் - வல்ல வான பராபரன் இயேசு - தம் வல்லமை நிறைந்த எங்கள் தேவனே - 2 தாழ்மையின் கோலம் ஏன் எடுத்தீரோ - 2
4. யேகோவா கர்த்தர் - எங்கள் எல்லாம் வல்ல தேவன் - இயேசு கர்த்தாதி கர்த்தாவே ராஜாதி ராஜாவே - 2 கந்தைத் துணி தான் உம் போர்வையோ - 2
5. பிதாவின் மடியில் - செல்ல பிளளையாக இருந்தீர் - தேவா எம்மோடிருந்திட இம்மானுவேலராய் - 2 ஈனக்கோலம் தான் எடுத்து வந்திரோ - 2
6. ஜீவன் நிறைந்த தேவனே - எங்கள் ஜீவாதிபதியாம் கர்த்தரே - மெய் ஜீவ ஒளி தரும் ஜீவ பிதாவே - 2 மேசியாவாக மேதினியில் வந்தீரோ - 2
7. ஜனங்களின் பாவங்களை நீக்கி - தேவா கிருபையால் இரட்சித்திடவே தம் இயேசு என்ற இரட்சகராக - 2 இப் பூ உலகில் அவதரித்தீரோ ?
8. பாவத்தின் தண்டனையை - தாமே பாவிகட்காய் அனுபவித்து - தேவா பாவிகளை விட்டகற்றிடவும் - 2 பரமசந்தோஷம் கொடுக்கவும் வந்தீரோ - 2
9. கல்வாரிச் சிலுவை தனில் - கொடும் வேதனைகளை அடைந்து - தேவா பாடுபட்டு ஜீவன் விட்டிடவும் - 2 பரலோக ராஜ்யம் கொடுக்கவும் வந்திரோ - 2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj