மனிதரைக் கட்டி இழுக்கும்
manidharaik katti izhukkum
மனிதரைக் கட்டி இழுக்கும் - அன்பின் கயிற்றினை அறுத்தது யார் தேவனும் மனிதனும் இணைந்திடாதபடி உறவை சிதைத்தது யார் - தேவ
கண்டு பிடிப்போம் கண்டுபிடிப்பும் - அந்த எதிரி யார் என்று கண்டு பிடிப்போம்
1. இறைவன் நமக்களித்த மகிமை ஆடையினை இடையினில் பறித்தது யார் இரு கனிகளிருக்க அறிவுக் கனிகாட்டி உயிர்க்கனி மறைத்தது யார் புரிந்து கொள்வோம் புரிந்து கொள்வோம் - அந்த பேயினை புரிந்து கொள்வோம் - மனிதர்
2. இறைவன் எழுதி தந்த இரண்டு பலகைகளை உடைத்திட செய்தது யார் - கவி எழுதி குவிந்தாலும் ஈசாயின் மகன் வழிவிட செய்தது யார் அறிந்து கொள்வோம் அறிந்து கொள்வோம் - அந்த வஞ்சனை அறிந்து கொள்வோம் - மனிதரை
3. பரமன் தினம் புசித்து வாழ்ந்தவன் பாதையை மாற்றியதார் பையில் பணம் தந்து மெய்யை காட்டித்தர கைக்குள் போட்டுக் கொண்டார் விலக்கிடுவோம் விலக்கிடுவோம் - அவன் வழிகளை விலக்கிடுவோம்
மனிதரை கட்டியிலுக்கும் - அன்பின் கயிற்றினை அறுத்தது யார் தேவனும் மனிதன் இணைந்திட கல்வாரி சிலுவையை சுமந்தது யார் கண்டு பிடிப்போம் கண்டு பிடிப்போம் - இந்த உண்மையை கண்டு பிடிப்போம்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam