மனிதன் பலவித முகங்கள்
manidhan palavidha mugangal
மனிதன் பலவித முகங்கள் பார்க்கையில் மனதுக்குள் சிரிக்கின்றேன் - அவன் முகத்திரை விலகி வேஷம் கலைகையில் மனதுக்குள் அழுகின்றேன் - என்
1. வாயில் வசனம் மணக்க மனதில் லாப கணக்கு அகத்தில் வெறுப்பிருக்க முகத்தில் புன்னகை காட்டி மயக்கும் மனிதன் - அவனை நினைக்கையில் அழுகின்றேன் - என் மனதுக்குள் துடிக்கின்றேன் - மனிதனின்
2. ஜொலிக்கும் உலகை காட்டும் - அது கிடைக்கும் எனவும் உரைக்கும் ஆட்டின் தோலுக்குள் பதுங்கும் ஓநாய்கள் பாட்டில் மயங்கும் மனிதன் - இவன் நினைக்கயில் சிரிக்கின்றேன் என் மனதுக்குள் துடிக்கிறேன் - மனிதனின்
3. வரங்கள் மிகுந்து பெருகும் அதை அறிந்து உலகம் மயங்கும் தங்களை கொண்ட தம்மை அளந்து பார்த்திடும் தந்திரமான மனிதன் - இவன் நினைக்கையில் அழுகின்றேன் என் மனதுக்குள் துடிக்கிறேன் - மனிதனின்
4. வேத வசனம் விலக்கி - பெரும் உணர்ச்சி வசத்தில் நிரம்பி துடிக்கும் மனிதனுக்கு தூய ஆவிக்கும் முடிச்சு போடும் மனிதன் இவன் நினைக்கையில் சிரிக்கின்றேன் என் மனதுக்குள் துடிக்கிறேன் - மனிதனின்
5. உடலும் பொருளும் வேண்டேன் அந்த சிலுவை ஒன்றே போதுமே அடிச்சு வடு தெரிய இடுக்கமான வழி தேடும் புதிய மனிதன் உறவை நினைத்தே ஏங்குகின்றேன் இந்த உலகெங்கும் தேடுகின்றேன் - மனிதனின்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam