மலரிதழ் மேலே
malaridhazh melae
மலரிதழ் மேலே பனித்துளி போலே ஒரு துளி அன்பு யார் தருவார் என்று ஏங்குதே என் மனம் இன்று - இயேசையா ஏங்குதே என் மனம் இன்று
1. வளம் தரும் வாழ்வினை கனவு கண்டேன் வறண்ட வனாந்திரம் வாய்த்ததென்ன குணம் கெட்ட மாந்தர்களின் இதமற்ற வார்த்தைகளால் மணம் தரும் மலர் கூட முள்ளாகிப் போனதென்ன - மலரிதழ்
2. குலக்கொடியாய் நல்ல கனி தரவே கனிச்செடியாம் உம்மில் இணைத்திருந்தீர் கனியற்ற விஷக்கொடியாய் கருக்குள்ள முள்ளாகி உறுத்திய என்மீதும் உம் அன்பை பொழிந்ததென்ன - மலரிதழ்
3. வருகையின் நாளில் மகிழ்வுடன் முகமுகமாய் உம்மை தரிசிக்கவே கிருபையின் கரங்களுக்குள் அனுதினம் அடங்கிடுவேன் திருவருள் தரும் தேவன் திருப்பாதம் பணிந்திடுவேன்-மலரிதழ்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam