மாயை மாயை எல்லாம் மாயை
maayai maayai ellaam maayai
மாயை மாயை எல்லாம் மாயை கண்ணில் காணும் யாவும் மாயை வாழ்வை நினைத்து பார்க்கபார்க்க மாயையை மாயையே
உலக உறவு நிரந்தரமல்ல ஒரு நாள் எல்லாம் மாறுமே கூடி வாழ்ந்த சொந்தங்களெல்லாம் ஓர் நாள் ஓடி மறையுமே வாழ்க்கை எல்லாம் நாடகம்தானே உறவுகள் இதிலே வேசங்களே வேசம் ஓர் நாள் கலைந்திடுந்தானே இயேசுவின் உறவே நிரந்தரமே இதுவே இதுவே மெய்யே
எல்லா நதியும் கடலில் விழுந்தும் ஒரு போதும் கடல் நிரம்பாது என்னதான் பணம் புகழ் நீ சேர்த்தாலும் மனம் திருப்தி அடையாது படிப்பு பதவி செல்வங்கள் எல்லாம் இயேசுவின் வருகையில் உதவாது உலகத்திற்காய் நீ சாதிப்பதெல்லாம் பரலோகம் கொண்டு சேர்க்காது எல்லாம் மாயை மாயை
பரந்து விரிந்த வானங்கள் எல்லாம் அழகாய் ஜொலிக்கும் விண்மீன்கள் எல்லாம் மலைகள் மரங்கள் பூமியெல்லாம் அழகான வீடு நகரங்களெல்லாம் ஒரு நாள் வெந்து உருகியே போகும் மனிதன் முயற்சி வீணாகும் பரலோகம் நரகம் இவைகள் தானே நித்தியமாக நிலைத்திருக்கும் எங்கே நீயும் போவாயோ
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia