அதிகாலை தினம் தேடியே
adhigaalai thinam thediyae
அதிகாலை தினம் தேடியே - உம் முகத்தினில் விழித்திடுவேன் புதுகிருபை அதை தேடியே - உம் பாதத்தில் அமர்ந்திடுவேன் ஆனந்தம் பேரின்பம் - என் அன்பரின் பாதத்திலே ராஜா அல்லேலூயா - என் தேவா அல்லேலூயா
1. கரங்களை விரித்து கர்த்தரை பார்த்து காலையில் பணிந்திடுவேன் கவலையை மறந்து மகிழ்வுடன் இருந்து மகிமையை செலுத்திடுவேன் பாதத்திலே முகம் பதித்து முத்தங்கள் செய்திடுவேன் ராஜா அல்லேலூயா - என் தேவா அல்லேலூயா
2. கதிரவன் வரும் முன் கர்த்தரை தேட கண்களும் விழித்திடுதே உம்மனம் குளிர என் மனம் பாட ஆயத்தமாகிடுதே உம் வசனம் தியானித்திட உள்ளம் காத்திடுதே ராஜா அல்லேலூயா - என் தேவா அல்லேலூயா
3. கண்ணிமை நேரம் உம்மை மறவாமல் கருத்தாய் நினைத்திடவே கனிவாய் இரங்கி கருணை ஈந்து கரத்தால் அணைத்திடுமே நாள் முழுதும் வல்லமையால் நிதமும் நனைத்திடுமே ராஜா அல்லேலூயா - என் தேவா அல்லேலூயா
More from Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia
- இதயமே நீ பாடுidhayamae nee paaduPr. Selvakumar · Messia