குருசினில் கிறிஸ்துவின்
kurusinil kiristhuvin
குருசினில் கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்படும் கோரக் காட்சியைப் பார் பாதகர்க்காகப் பாடுபடும் வேளைதனில் - 2
புது உடன்படிக்கையின் இரத்தம் பாவ மன்னிப்புக்காய்ச் சிந்தினாரே - 2 பாவிகளின் நேசர் இயேசு தாமே - 2
கெத்செமனே இல் கிறிஸ்து இயேசு இரத்தமதைப் பெருந்துளிகளாகச் - 2 சிந்தினாரே சீர்கெட்ட பாவிகட்காய் - 2
தீயர் தாடை ரோமம் பிடுங்கும் வேளை தூயர் தம் தூய முகத்தினின்று - 2 தூய்மையான இரத்தமதைத் தாம் சிந்தினார் - 2
வாரினால் அடித்துப் படைச்சால்போல் திரு சரீரம் கீறிக் கிழியும் வேளை - 2 கர்த்தர் தாமே திரு இரத்தம் தாம் சிந்தினார் - 2
முள்முடி சூட்டியே சிரசினில் மூங்கில் தடியால் அடிக்கும் வேளை - 2 மீட்பர் இயேசு திரு இரத்தம் தாம் சிந்தினார் - 2
திருப்பரங் கால்கள் ஆணிகளால் சிலுவையுடன் சேர்த்து அறையும் வேளை - 2 திரு இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தோடியது - 2
குருசினில் தொங்கும் கிறிஸ்துவின் விலாவினில் ஈட்டியால் குத்தும் வேளை - 2 மீந்த இரத்தமதை முழுதுமாகத் தாம் சிந்தினார் - 2
ஜீவ இரத்தமதைப் பானம் செய்வோர் நிலைத்து என்றென்றும் ஜீவனோடு- 2 சதாகாலமும் கிறிஸ்துவுடன் பிழைத்திருப்பார் - 2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj