கேட்டதை எல்லாம் தருவார்
kettadhai ellaam tharuvaar
கேட்டதை எல்லாம் தருவார் இயேசு ராஜனே கேளாதும் தருவார் நித்திய தேவனே அமுக்கி குலுக்கி மடியில் சரிந்து விழும்படி தருவார் - நீ அளந்து கொடுக்கும் அளவெதுவோ அதன்படி தருவார் அறிந்திடாத எட்டாத பெருங் காரியம் செய்வார் - நீ
1. பறவைகளைப் பார் அவை விதைப்பதுமில்லை அறுத்ததையெல்லாம் களம் சேர்ப்பதுமில்லை பசியோடு பறந்த பறவை பார்த்ததில்லையே பிழைப்பூட்டும் பரமன் இயேசு துணை இருக்கையிலே - கேட்ட
2. வண்ண மலர்களை பார் அவை உழைப்பதுமில்லை - தம் உடைகளுக்காக அவை நூற்பதுமில்லை அது போல அழகு மேனி நமக்கில்லையே சாலமோன் அது போல அணிந்ததில்லை - கேட்ட
3. கவலையினால் முழம் கூடுவதுண்டோ விசாரத்தினாலே பொருள் அசைவதுமுண்டோ ஆகாரம் காட்டிலும் நாம் ஜீவன் உயர்ந்தது ஆடைகளை காட்டிலும் நம் உடலும் சிறந்தது - கேட்ட
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam