கெத்சமனே தோட்டத்திலே
kethsamanae thottathilae
கெத்சமனே தோட்டத்திலே தேவகுமாரன் இயேசுவே விண்வாசல் திறந்து ஜெபித்தார் ஜெபித்தார், ஜெபித்தார், ஜெபித்தாரே, ஜெபித்தார்.
1. இரத்தம் துடித்து கொதித்து இதயம் நொறுங்கி ஜெபித்தார் இயேசுவின் ஜெபத்தின் ஆவி அக்கினியாய் என்னில் இறங்கி துணிந்து ஜெபிக்க ஏவிடுதே
2. பெருமூச்சு வியாகுலத்தில் பிதாவின் சித்தமே அறிந்தார் தெய்வீக ஞானத்தின் அறிவு வான் மகன் இயேசுவின் நிறைவு தெளிவாய் என்னோடே பேசிடுதே
3. தேவனின் சித்தத்திற்கு என்றும் தன்னையே முற்றும் ஒப்புவித்தார் தெய்வீக சித்தத்தின் சித்தம் ஆத்தும நேசரின் பக்கம் அன்பாலே இன்றென்னை இழுத்திடுதே
4. இரத்தத்தின் வேர்வையோடே கரைந்து முற்றும் உடைந்தார் நித்திய தயவு இரக்கம் இயேசுவின் மனதின் உருக்கம் என்றும் என்னையும் நிறைத்திடுதே
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal