கஸ்திகளடைந்தார் கஸ்திகளடைந்தார்
kasthigaladaindhaar kasthigaladaindhaar
கஸ்திகளடைந்தார் கஸ்திகளடைந்தார் - 2 கர்த்தர் இயேசு கல்வாரியில் கஸ்திகளடைந்தார் - 2
கெத்செமனே தோட்டமதில் இரத்த வியர்வை சிந்தியே - 2
அன்று ஏதேன் - தோட்டமதில் - உயிர்கொண்ட - பாவமதை அன்பின் தேவன் - இயேசு தாமே - முற்றிலுமாய்க் - கொன்றிடவே அகோரமாம் கஸ்திதனைக் கெத்செமனேயில் தாம் அடைந்தார் - 2
பலவீனமான - மானிடரின் - பலவீனமெல்லாம் - போக்கிடவே பலவீனத்தோடு - பச்சைப் பச்சை - இரத்தமதில் - கமந்து வீழ்ந்தார் பலவானான எங்கள் தேவன் பயங்கரமாய்க் கஸ்திகளடைந்தார் - 2
சாபத்துள்ளான சந்ததியின் - சாபமெல்லாம் - நீக்கிடவே சாபத்தீடான - சிலுவை தனில் - சர்வநாதன் - தொங்கி மரித்தார் சர்வத்திற்கும் மேலான தேவன் சர்வ வல்லமையின் தேவன் - 2
சிரசினில் - முள்முடி சூட்டி - மூங்கில் தடியால் - அடிக்கப்பட்டார் அழகுவாய்ந்த - முகந்தனிலே - அநேகரால் - துப்பப்பட்டார் அருமை இயேசு அன்பு இயேசு அவனிதனில் கஸ்திகளடைந்தார் - 2
பாரமான - சிலுவை தன் - பாதகர்க்காய்த் - தாம் சுமந்தார் சிலுவை சுமக்கப் - பலனில்லாமல் - சிலுவையிலே - தாம் விழுந்தார் பாவி நேசன் பாவ நாசன் பரிதாபமாய்க் கஸ்திகளடைந்தார் - 2
சிலுவையுடன் - தரையில் வீழ்ந்து - எழும்பக்கூடாமல் இருந்தபோதும் சிறிதுமே - இரக்கமின்றி - ஈனர்களால் - வதைக்கப்பட்டார் சீர்மிகு தேவன் சீர்கெட்டோரால் சிறுமைப்படுத்தப்பட்டார் - 2
சிரேனே ஊரான் - சிலுவைதனைத் - தூக்கிடவே - மீண்டும் எழுந்தார் சிரேனே ஊரானும் தாங்கிட - சிலுவைதனை மீண்டும் சுமந்தார் சிலாக்கியமான பாக்கியமதனை ஆயத்தமாக்கக் கஸ்திகளடைந்தார் - 2
திருக்கரம் கால்கள் - தளர்ந்து நடுங்க - கொல்கொதா மலை யேறினார் குருசினில் - திருக்கரங்கால்கள் - ஆணிகளால் - அறையப்பட்டார் கொடுமையான பாடுகளைக் கர்த்தர் இயேசு தாமடைந்தார் - 2
சிலுவையில் - மூன்றாணிதனில் - வேதனையுற்று - துடி துடித்தார் விலாவதிலே - ஈட்டியினால் - ஓங்கியே - குத்தப்பட்டார் சாத்தானின் தலையதனைத் தகர்த்திடவே கஸ்திகளடைந்தார் - 2
அதிக பசி - தாகத்தினால் - கண்ணும் மிக குழி விழுந்தது அழகு முகம் - அழுக்கடைந்து - முதுகோடு வயிறும் - ஒட்டியது அன்பர் இயேசு அன்பின் இயேசு அகோரமாய்க் கஸ்திகளடைந்தார் - 2
பாவிகளின் - மன்னிப்புக்காய்ப் - பரிவுடனே வேண்டிக்கொண்டார் பாவிகளைப் - பரிசுத்தமாக்க - பரிசுத்தர் இயேசு - இரத்தம் சிந்தினார் பாவிகளைப் பரலோகம் சேர்க்க பரலோகின் தேவன் கஸ்திகளடைந்தார் - 2
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj