கர்த்தரின் பலத்த செயல்களை
kartharin palatha seyalgalai
கர்த்தரின் பலத்த செயல்களை யாவரும் எண்ணி மகிழ்ந்திடுவோம்
பரலோகின் தேவனின் மகிமையான செயல்களைத் தினமும் எண்ணி
வானம் சிங்காசனமாயும் பூமி பாதப்படியுமாய் கொண்ட மகாபெரிய தேவனாம் கிறிஸ்து இயேசு இவர்
பூமியை அஸ்திபாரப்படுத்தி அதற்கு அளவு குறித்தவர் அதின் மேல் நூல் போட்டு அதின் கோடிக்கல்லை வைத்தவர் கர்த்தர் இயேசு
தண்ணீர்களைக் கைப்பிடியால் அளந்து வானங்களை ஜாணளவாக்கி பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி மலைகளைத் தராசால் நிறுத்த தேவன்
இம்மட்டும் வா மிஞ்சிவராதே என சமுத்திரத்திற்குக் கட்டளையிட்டு அலைகள் மோதி அடித்தாலும் மேற்கொள்ளாத படி மணலை எல்லையாய் வைத்தவர்
தராசில் படிந்த தூசி போலவும் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும் ஒன்றுமில்லா சூனியமாகவும் ஜனங்கள் யாவரும் தேவன் முன் இருக்கின்றனர்
மகா பராக்கிரமசாலியான தேவன் தீவுகளை அது தூக்குகிறார் மனுஷர் மேல் அவர் ஊதவே அவர்கள் பட்டு ஓர் துரும்பு போல் பறந்து போவார் கர்த்த
பயப்படத்தக்க தேவன் மகா பயங்கரமான தேவன் தமது ஜனங்களுக்காய் யுத்தம் செய்யும் சர்வ வல்லமையின் தேவன்
சர்வத்தையும் படைத்த தேவன் சர்வாதிகார முடைய தேவன் ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிற அதிசய தேவன் கர்த்த
இருந்தவரும் இருக்கிறவரும் வருகின்ற வருமான கர்த்தர் இவர் அல்பாவும் ஓமெகாவும் ஆதியும் அந்தமுமான தேவன்
பரிசுத்தமும் சத்தியமும் நீதியும் நிறைந்த தேவன் பாவிகட்கு நரகையும் தம் பரிசுத்தர்க்கு பரலோகையும் அளிக்கும் தேவன்
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj