கர்த்தரைத் துதி செய்து
kartharaith thudhi seydhu
கர்த்தரைத் துதி செய்து களிகூர்ந்திடுவேன் அற்புதரை இன்று கண்டு ஆர்ப்பரித்திடுவேன்
1. இயேசுவின் பாதத்தில் பரவசம் காண்கின்றேன் இன்னல்கள் மறந்து இனிமை பெற்றிட காலமும் கடைசி ஆகிடுதே ..... இதோ கர்த்தர் வரும் நாளும் நெருங்கிடுதே - கர்த்தரை
2. புதிய பாதையில் புதுமையைக் காண்கிறேன் புதிய வருடத்தில் வல்லமை பெற்றிட பூவைப் போல் மலரும் மகிமை நாட்களிலே புனிதனைப் புகழ்ந்து நான் மகிழ்ந்திடுவேன்- கர்த்தரை
3. மாய உலகத்தில் வெறுமையைக் காண்கிறேன் மாட்சிமை இயேசுவின் மகிமை பெற்றிட சத்திய பாதையில் நின்று ஓடிடுவேன் சந்தோஷம் பொங்கிட சந்திப்பேன் இயேசுவை- கர்த்தரை
4. இனிய இரட்சிப்பில் இயேசுவைக் காண்கிறேன் இன்பம் பொங்கிடும் சேவை பெற்றிட இரட்சகர் கரங்களில் தாங்கிடுவார்.... நான் இன்முகத்தோடே பறந்திடுவேன் - கர்த்தரை
5. சீயோனின் சிகரச் செழிப்பை காண்கிறேன் சீருடன் வந்திடும் சிறப்பைப் பெற்றிட வாஞ்சையில் பெருகிடும் வெகுமதி வந்திடும் வற்றாத ஜீவ வாழ்வடைந்திடுவேன் - கர்த்தரை
6. ஆத்தும நேசரை ஆவியில் காண்கிறேன் ஆவியின் மழையை நிறைவாய் பெற்றிட லீலியும் மலர்ந்திடும் நேசரும் வந்திடுவார் மகிமையில் மறுரூபம் தரித்திடுவேன் - கர்த்தரை
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal