கர்த்தர் சபையே கர்த்தரின் சபையே
karthar sabaiyae kartharin sabaiyae
கர்த்தர் சபையே கர்த்தரின் சபையே களிகூர்ந்து மகிழ்ந்திடுவாய் கர்த்தராம் இயேசு தமது சபையை இதோ சேர்க்க வருகின்றார் ஆ! ஆ
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாதது கர்த்தர் சபை பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையானது சபை ஆ! ஆ
இரட்சிக்கப்பட்டோரின் சங்கமே கர்த்தரின் சபையாகும் பரிசுத்தவான்களின் சங்கமே தேவனின் சபையாகும் ஆ! ஆ
பரலோகில் பெயரெழுதியிருக்கிற முதற்பேறானோரின் சர்வ சங்கமாகிய சபையே கர்த்தரின் சபையாகும் ஆ! ஆ
தேவன் தமது சுய இரத்தம் சிந்தியே சம்பாதித்துக் கொண்ட தமது சபையே நீதிமான்களின் சங்கமாம் சபையாகும் ஆ! ஆ
சத்தியத்திற்கு தூணும் ஆதாரமும் ஆனது கர்த்தர் சபை ஜீவனுள்ள தேவனின் வீடாம் கர்த்தருடைய சபை ஆ! ஆ 2
ஊழியங்களையும் ஆளுகைகளையும் பற்பல பாஷைகளையும் பிரித்தெடுக்கப்பட்ட ஊழியர்களையும் கொண்டது கர்த்தர் ஆ! ஆ
பரீட்சிக்கப்பட்டதும் விலையேறப் பெற்றதும் திட அஸ்திபாரமானதும் சீயோனில் வைத்த மூலைக்கல்லாகிய கிறிஸ்துவே சபைத் தலைவர் ஆ ஆ
சபையின் தலைவராம் கிறிஸ்து இயேசுவைப் பரிபூரணமாகவே விசுவாசிக்கிறவன் எவனும் பதறவே மாட்டான் ஆ! ஆ
கிறிஸ்து இயேசுவும் கல்லின் மேல் கட்டப்பட்ட சபையை பாதாளத்தின் வாசல்கள் எதுவும் மேற்கொள்வதில்லை ஆ! ஆ
இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் நொறுங்கி போவான் இந்தக்கல் எவன் மேல் விழுமோ அவன் நசுங்கியே போவான் ஆ! ஆ
கர்த்தர் தமது திரு சரீரமாம் தமது சபைக்கு அற்புதங்கள் குணமாக்கும் வரங்கள் அதிகமாய் அளிக்கின்றார் ஆ! ஆ
கர்த்தரின் வருகையின் நாளானது சமீபித்து வருவதால் சபை கூடி வருதலை ஒருவருமே விட்டு விடாதிருங்கள் ஆ! ஆ
மகா சபையாம் கர்த்தரின் சபையே களிகூர்ந்து மகிழ்ந்திரு மகிபனாம் இயேசுவின் திரு வருகையை எதிர்நோக்கிக் காத்திரு ஆ! ஆ
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj