கனிமண் நான்தான்
kaniman naandhaan
தொகையறா படைத்தீரே படைப்பெல்லாம் மனுவிற்காக - அந்த மனுவை படைத்தீர் உம்மை என்றும் வணங்க மண்ணான நானுமை மறந்தென்றும் வாழாமல் எந்நாளும் உமைநினைந்து வாழ்ந்திடவே அருள்தாரும்
கனிமண் நான்தான் தேவா - பரம குயவனும் நீர்தான் இறைவா உம் சித்தம் போல் எனை வனைந்திட வேண்டும் உம் வழி நானும் நடந்திட வேண்டும்
1. நானல்ல நீர்தான் எனை - இந்த நானிலத்தில் தெரிந்து கொண்டீர் கருவாக உருவாகுமுன் - என்னை பேர் சொல்லியே அழைத்தவர் நீர் கனமான உந்தன் ஊழிய் செய்ய எனக்கருள் ஈந்திடுவீர் - ஐயா
2. அன்பே உம் சிலுவையின்றி - இந்த அவனியிலே மேன்மை உண்டோ என்மேன்மை யாவுமின்று - உம் முன்பாகவே குப்பையன்றோ பெயர் புகழ் எல்லாம் உம்பாதம் சேரும் மாறாத கிருபை போதும் என்றும்
3. காணாத ஆட்டினைப் போல் - வழி தவறியே நான் செல்கையிலே மாறாத அன்புடனே - எனை தேடிவந்த நல்மேய்ப்பரே எனக்காக உந்தன் ஜீவனைத் தந்தீர் உமக்காக நான் வாழுவேன் - என்றும்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal